ரஜினி ரசிகர்களுக்கு வயதாகி விட்டது… ஓன்றும் செய்ய முடியாது... நக்கலடித்த அரசியல் தலைவர்!

by adminram |

58acceca60e1ec83d7c2dbb05cc3deac

ரஜினி இன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள வேளையில் நாஞ்சில் சம்பத் அவரைக் கேலி செய்யும் விதமாகப் பேசியுள்ளார்.

மதிமுகவில் இருந்து வெளியேறிய நாஞ்சில் சம்பத் அதிமுக வில் ஐக்கியமாகி இன்னோவா காரோடு பேச்சாளராக வலம் வந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அங்கு ஏற்பட்ட குளறுபடிகளை அடுத்து எடப்பாடி அணியில் சேர்ந்து பின்னர் அங்கிருந்தும் விலகி, திமுகவில் இப்போது இருக்கிறார்.

இந்நிலையில் இன்று அவர் அளித்த நேர்காணலில் ரஜினியின் அரசியலை அவர் கேலி செய்துள்ளார். அதில் ‘ரஜினி ரசிகர்கள் எல்லோருக்கும் என் வயது ஆகிவிட்டது. அவர்களால் இப்போது என்ன செய்ய முடியும்’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினி இன்று அவரது மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story