விஜயை தாக்க ரசிகர்கள் போட்ட பிளான்.. வாயைத் திறக்காத ரஜினி.. கமல் செஞ்ச பெரிய விஷயம்

by ராம் சுதன் |

பீதியை கிளப்பிய ஆடியோ: சமீபத்தில் ஒரு ஆடியோ வைரலானது. அதில் ரஜினி ரசிகர்கள் என்ற வகையில் ஒருவர் பேசினார். அதாவது விஜய் பிரச்சாரம் போகும்போது அவர் மீது முட்டை வீசுவோம் என்று மிகவும் கொச்சையாக பேசி அந்த ஆடியோவை வெளியிட்டு இருந்தார். இதற்கு விஜய் ரசிகர்களும் கொந்தளித்து பதிலடி கொடுத்தனர். ரஜினி ரசிகர்களும் பதிலுக்கு பேசினார்கள் .இதற்கிடையில் ரஜினிகாந்தின் மேலாளர் ரியாஸ் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

எனக்கு சம்பந்தமே இல்லை: இதற்கும் ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாரோ ஒரு ரசிகர் போட்டதற்கு நீங்கள் இரண்டு ரசிகர்களுக்குள் சண்டை போட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதைப்பற்றி வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். நடிகர்களின் ரசிகர்கள் என்று இருப்பவர்கள் பல நேரங்களில் முட்டாள்கள் ஆக தான் இருக்கிறார்கள். ரசிகர்கள் ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் போட்டி எனும் வரும்போது தனக்கு போட்டி நடிகராக யார் ஒருவர் வருகிறாரோ அவரை எதிரியாக பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

விஜய் எதிரி: அப்பொழுது இவர்களுடைய மனநிலையில் ஒரு கோளாறு இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இப்போது நீங்கள் குறிப்பிடுகிற அந்த ரசிகர் நிச்சயமாக ரஜினி ரசிகராக தான் இருக்க முடியும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை .ரஜினி மீதான அந்த அதீத பிரியம் தான் விஜய் மீது வன்மமாக வெளிப்படுத்தி இருக்கிறது .மற்ற நடிகர்களை எல்லாம் விட்டுவிட்டு விஜய் மீது ஏன் இவ்வளவு வன்மம்ம் எனும் பார்க்கும் பொழுது சமீப காலமாக ரஜினிக்கு விஜய் தான் போட்டியாளர் அல்லது விஜய்க்கு ரஜினிகாந்த் போட்டியாளர் என்ற ஒரு சூழ்நிலை உருவானது தான் காரணம்.

ரஜினி செய்த தவறு: அதனால் தான் இவருடைய கோபம் விஜய் மீது திரும்பியது. இதில் என்னுடைய கேள்வி என்னவென்றால் ஒரு ரசிகன் விஜயை பார்த்து இப்படி ஒரு கேள்வியை கேட்டு இருக்கிறார் என்றால் உண்மையிலேயே ரஜினி என்ன பண்ண வேண்டும் ? அந்த ரசிகரை அவர் கண்டிக்க வேண்டும். அவரை அழைத்து பேசியிருக்க வேண்டும். ஏன் ரியாஸ் அறிக்கை விட்டதற்கு பதிலாக ரஜினி தன்னுடைய அறிக்கையை விட்டிருக்க வேண்டும்.

இப்படி செய்திருந்தால் தான் அந்த ரசிகனே திருந்துவான். இதில் ஒரு விஷயத்தை நாம் உற்று நோக்க வேண்டும். சில வருடங்களுக்கு முன்பு சுருதிஹாசனை பற்றி சிவகார்த்திகேயன் லூஸ் டாக் விட்டிருந்தார். அப்போது கமல் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை விமான நிலையத்தில் தாக்கினார்கள். அது பெரும் செய்தியாக பார்க்கப்பட்டது. உடனே கமல் என்ன செய்தார் தெரியுமா?

சிவகார்த்திகேயனுக்கு தொலைபேசியில் அழைத்து தன்னுடைய ரசிகர் செய்த செயலுக்காக மன்னிப்பு கேட்டார். இதுதான் நியாயம். ஆனால் ரஜினி அவ்வாறு செய்யவில்லை. கடைசியில் அந்த ரசிகர் என்னுடைய ரசிகரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ரஜினியின் மேலாளர் ரியாஸ் அறிக்கையில் கூறியிருப்பது வேடிக்கையாகத்தான் தெரிகிறது என பிஸ்மி கூறி இருக்கிறார்.

Next Story