’தர்பார்’ படத்தை வெளியிட தடை: அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் வெளியீட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ள நிலையில் சமீபத்தில் மலேசிய நிறுவனம் ஒன்று லைகா நிறுவனத்துக்கு எதிராக ஒரு மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது

அதில் லைகா நிறுவனம் தயாரித்த2.0 படத்தை மலேசியாவில் திரையிடவும் வினியோகம் செய்யவும் ரூபாய் 20 கோடி ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், மேலும் கூடுதலாக 12 கோடி ரூபாய் இந்த படத்திற்காக தங்கள் நிறுவனம் கொடுத்ததாகவும் இவை அனைத்தையும் சேர்த்து ரூபாய் 23 கோடி லைக்கா நிறுவனம் தங்களுக்கு தரும்வரை ’தர்பார்’ படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது

இந்த மனு மீதான விசாரணையின்போது லைக்கா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. இதனை அடுத்து இந்த படத்திற்கு தடை விதிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்த நிலையில் சற்று முன் வெளியான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி ’தர்பார்’ திரைப்படத்தை மலேசியாவில் மட்டும் வெளியிட தடை என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் மலேசியாவில் உள்ள ரஜினி ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Published by
adminram