வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ரஜினி பட நடிகை – கசிந்த செய்தி

இப்படத்தை போனிகபூர் தயாரிக்கிறார். அதாவது, நேர்கொண்ட பார்வை படத்தின் குழு அப்படியே இப்படத்தில் ஒன்றாக பணிபுரிந்து வருகிறது. இப்படத்தின் கதாநாயகி வேடம் இன்னும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யாமி கவுதம் ஆகிய பெயர்கள் அடிபட்டன. அதன்பின், பாலிவுட் நடிகைகள் சிலரின் பெயர் அடிபட்டது. ஆனால், அவை எதுவும் உறுதியாகவில்லை. 

எனவே, வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக யார்தான் நடிக்கிறார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. 

இந்நிலையில், காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த பாலிவுட் நடிகை  ஹூமா குரோஷி நடிக்கவிருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனாலும், இதுபற்றி அதிகாரப்பூர்வமாக செய்தி இன்னும் வெளியாகவில்லை.

Published by
adminram