மின்னல் வேகத்தில் ரஜினி.. மிரண்டுப்போன ‘அண்ணாத்த’ படக்குழு.....

by adminram |

015d8f66258455b976b5a63b9d7f8083-1-2

ரஜினி தற்போது ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிறுத்தை, வேதாளம், வீரம், விஸ்வாசம் ஆகிய படங்களை இயக்கிய சிவா இப்படத்தை இயக்கி வருகிறார்.

a7df0b83e9acb50eb36f793239034d69

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் இறுதி படப்பிடிப்பு 4 நாட்கள் கொல்கத்தாவில் நடைபெறுவதாகவும், ரஜினி கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. ஆனால், தற்போது அது மாற்றம் செய்யப்பட்டு சென்னையிலேயே படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீபத்தில் வடபழனியில் உள்ள ஃபோரம் ஹாலின் கார் பார்க்கிங் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. அடுத்து லக்னோவில் சில காட்சிகளை படம் பிடிக்கவுள்ளனர். அதன்பின் சில நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து விடும்.

d65a15cc83106f499aacaddfb6219db0-3

ஒருபக்கம் இப்படத்தின் டப்பிங் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் ரஜினி இரண்டரை நாளில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துக்கொடுத்துவிட்டாராம். வலிமை படத்தின் டப்பிங்கை அஜித் இரண்டரை நாளில்தான் பேசி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story