நடிகர் ரஜினி ஏற்கனவே 2 முறை மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் முதல் அறுவை சிகிச்சை சிங்கப்பூரிலும், 2வது அறுவை சிகிச்சை அமெரிக்காவிலும் செய்யப்பட்டது. அதன்பின் அவர் பேட்ட, தர்பார் என தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இதற்கிடையே, தனது உடல் நிலையை பரிசோதிக்க ரஜினி அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது. எனவே, இதற்கான சிறப்பு அனுமதியை அவர் மத்திய அரசிடம் பெற்றார், அதன்படி நேற்று இரவு தனி விமானத்தில் அவர் அமெரிக்கா பறந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கியிருந்து அவர் சென்னை திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில்…
கார்த்தி நடிப்பில்…
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…