திரைத்துறையில் போட்டி இருந்தாலும் ரஜினியும், கமல்ஹாசனும் தற்போதுவரை நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள். ஏற்கனவே அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள ரஜினி 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறார். தான் திரைத்துறையிலிருந்து விலகும் முன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு திரைப்படம் நடித்துக்கொடுக்க அவர் விரும்புவதாக தெரிகிறது. சில மாதங்களுக்கு முன்பு இது தொடர்பான செய்திகளும் வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தின் பூஜை மார்ச் 5ம் தேதி நடக்கவிருப்பதாகவும், அன்று இயக்குனர் யார் என எல்லோருக்கும் தெரியவரும் என தற்போது செய்திகள் வெளிவந்துள்ளது. மாநாடு, கைதி மற்றும் மாஸ்டர் திரைப்படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான் இப்படத்தை இயக்குகிறார் எனவும், அவர் அல்ல வேறு இயக்குனர் எனவும் சமூகவலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
இதற்கான விடை மார்ச் 5ம் தேதி தெரிந்து விடும்….காத்திருப்போம்…
சிறுத்தை சிவா…
ரஜினி சிவாஜி…
Sun serials:…
Good Bad…
AR Rahman:…