
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் தர்பார். இப்படத்தில் யோகிபாபு, நயன்தாரா, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
ஆனாலும், இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி 4 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இப்படம் சென்னையில் மட்டும் ரூ. 7.28 கோடி வசூல் செய்துள்து. மொத்தமாக தமிழகம் முழுவதும் ரூ.89 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுவரை இப்படம் உலக அளவில் ரூ. 150 கோடியை வசூல் செய்துள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதோடு, ’யார் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால், அரியனை என்பது அரசனுக்கு மட்டுமே சொந்தமானது’என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
Here's the Worldwide Box-office collections of #DARBAR
"Anyone can play the game, but the throne always belongs to the EMPEROR "@rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty #DarbarPongal #DarbarBlockbuster pic.twitter.com/f2z0MGlzVv
— Lyca Productions (@LycaProductions) January 13, 2020