ரஜினி வெறும் நடிகர்தான்…அரசியல் தெரியாது.. இப்படி கலாய்ச்சிட்டாரே உதயநிதி..!

இதற்கு எதிராக டெல்லியில் பல்கலைக்கழக மானவர்கள் போராடு வருகின்றனர். ஆனால், விரைவில் அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இதுவரை அதுபற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘இந்த சட்டத்தால் (CAA) இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும் ஒருவேளை அப்படி ஆபத்து ஏற்பட்டால் நான்தான் முதலில் குரல் கொடுப்பேன் என்றும் கூறினார். அதேபோல் என்ஆர்சி என்பது மிகவும் அவசியமானது என்றும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தான் வெளிநாட்டினர் எத்தனை பேர் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அடிப்படை விஷயங்கள் தெரியாமல் பேசுகிறார் என பல அரசியல் தலைவர்களும், நெட்டிசன்களும் கூறி  வருகின்றனர்.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த நடிகரும், திமுக இளைஞரனி செயலாளருமான உதயநிதி ‘ நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்கு பதில் சொல்கிறேன்’ என தெரிவித்துள்ளார்

Published by
adminram