ரஜினி என் நண்பர்தான்; ஆனால் அவர் தமிழ்நாட்டை ஆளக்கூடாது – முன்னணி இயக்குனர் கருத்து !
ரஜினிகாந்த் தன்னுடைய நண்பராக இருந்தாலும் அவர் தமிழ்நாட்டை ஆள்வதில் தனக்கு உடன்பாடு இல்லையென இயக்குனர் பாரதிராஜ தெரிவித்துள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 40 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாகப் பழகி வருபவர். பல இடங்களில் அவரின் நடிப்பை எளிமையான அனுகுமுறையை அவர் பாராட்டி இருக்கிறார். ஆனாலும் அவர் தமிழக அரசியலில் இறங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ஒரு நேர்காணலில் அவரிடம் ‘நீங்கள் ரஜினியைப் புகழ்ந்து பேசுகிறீர்கள் ஆனால் ஏன் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என எதிர்ப்புத் தெரிவிக்கிறீர்கள்?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘ரஜினி எளிமையான மனிதர். எனது நண்பர். ஆனால் அவர் தமிழ்நாட்டை ஒருபோதும் ஆள நினைக்கக் கூடாது. மற்ற மாநிலங்களில் எல்லாம் அந்த மண்ணின் மனிதர்கள்தான் ஆளுகிறார்கள். அதுபோல எங்கள் மண்ணில் எங்கள் மைந்தன் ஏன் ஆட்சி செய்யக் கூடாது?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.