More

அரசியல் தலைவரின் மரணம்… முதல் ஆளாக திரையுலகில் இருந்து ரஜினி இரங்கல்!

கன்னியாகுமரி எம் பி வசந்தகுமாரின் மறைவுக்கு  அவரது நெருங்கிய நண்பரான ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 70.  அவரது மறைவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியில் இருந்து தமிழக அரசியல் தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திரையுலகில் அவருக்கு நெருக்கமான நண்பரான ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘அருமை நண்பர் வசந்தகுமாரின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கும், அவரைச் சார்ந்த அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.’ என அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Published by
adminram

Recent Posts