இப்போதான் ரஜினி படம் மாதிரி இருக்கு – தர்பார் கலக்கல் ப்ரோமோ வீடியோ !

தர்பார் படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஜினி படங்களுக்கே உரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தர்பார் படம் மந்தமாக வியாபாரம் மற்றும் விளம்பரம் செய்யப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதுபோல இதுவரை வெளியான தர்பார் படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் ரசிகர்கள் மத்தியில் வழக்கமான ஆதரவைப் பெறவில்லை.

படத்தின் ப்ரோமோக்களும் இதுவரை பெரிதாக கவனம் ஈர்க்காத நிலையில் நேற்றிரவு தர்பார் படத்தின் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. ரயில்வே நிலையத்தில் ரஜினி தனது மகளோடு நடனமாடிக்கொண்டே சண்டையிடுவது போன்ற அந்த காட்சிகளை பார்த்த ரசிகர்கள் இப்போதான் இது ரஜினி படம் மாதிரி இருக்கு எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சிறப்புக் காட்சி பார்த்தவர்களும் படத்தின் முதல்பாதி நன்றாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.

Published by
adminram