மீண்டும் பறக்கும் ரஜினி போஸ்டர் – கபாலி ஸ்டைலில் தர்பார் படக்குழு !

கபாலி படத்துக்கு விளம்பரம் செய்ய விமானங்களில் போஸ்டர் ஒட்டியது போல இப்போது தர்பார் பட போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது கபாலி. அதற்கு அந்த படத்தின் கதை பாதிக்காரணம் என்றால் தயாரிப்பாளர் தாணுவின் விளம்பர யுக்திகளும் பாதி காரணம். அந்த வகையில் கபாலி படத்தின் போஸ்டர்களை விமானங்களில் ஒட்டி ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்தார்.

இந்த பார்முலாவை இப்போது ரஜினியின் தர்பார் படத்துக்கும் படக்குழு செய்துள்ளது. பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாக இருக்கும் தர்பார் படத்தை முன்னிட்டு ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் தர்பார் ரஜினியின் போஸ்டர்கள் பிரம்மாண்டமாக ஒட்டப்பட்டுள்ளன.

Published by
adminram