50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாட நோ சொன்ன ரஜினி... கடைசில இப்படி ஆகிப்போச்சே

by ராம் சுதன் |

ஒரு துறையில் ஒரு நபர் சிறந்து விளங்குகிறார் என்றால் அவரை கொண்டாட வேண்டியது அவசியம். அந்த வகையில் சினிமாவில் கிட்டத்தட்ட 50 வருடமாக பல சாதனைகளை புரிந்து பல போராட்டங்களை கடந்து இன்று சூப்பர் ஸ்டார் ஆக நிலைத்து நிற்பவர் ரஜினிகாந்த். இந்த வருடம் அவருடைய ஐம்பதாவது பொன்விழா வருடம். அதனால் திரையுலகினர் அவருக்கு விழாவை பிரம்மாண்டமாக எடுத்து கொண்டாட நினைத்தார்கள்.

அந்த வகையில் இந்த விழாவை கலைப்புலி தாணு ஏற்பாட்டில் பிரம்மாண்டமாக விழாவை ஏற்பாடு செய்ய நினைத்தார்கள். அது சம்பந்தமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அது மட்டுமல்ல ரஜினியின் மேனேஜர் ரியாஸிடமும் இது பற்றி கூறியிருந்தார்கள். இது வியாபார நோக்கத்தில் எடுக்கப்படும் விழாவாக இருக்காது. முழுக்க முழுக்க அவருடைய சாதனையை பாராட்டும் விழாவாக தான் இது ஏற்பாடு செய்யப்படும் என்ற சொல்லியே ரியாஸ் மூலமாக ரஜினியுடன் செய்தி பகிரப்பட்டது.

ஆனால் ஒரேடியாக ரஜினி இந்த விழாவே கொண்டாட வேண்டாம் என சொல்லிவிட்டாராம். ஏன் இந்த முடிவு எடுத்தார் என தெரியவில்லை. ஆனால் ரசிகர்கள் அனைவரும் ரஜினிக்கு எப்படியாவது ஒரு பெரிய விழாவை எடுப்பார்கள். அது எந்த மாதிரி இருக்கும் என பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு வாரம் இந்த விழாவை எடுக்க திட்டமிட்டு இருந்தார்களாம் .அந்த ஒரு வாரத்தில் அவர் நடித்த சிறந்த படங்கள் திரையிடப்பட்டு அந்த படங்களின் இயக்குனர்கள் ரஜினியுடனான அனுபவத்தைமக்களிடம் நேரடியாக பகிரும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு வித்தியாசமான விழாவாக இருக்கும் என திட்டமிட்டு இருந்தார்களாம்.

ஆனால் முற்றிலுமாக ரஜினி அதற்கு நோ என்று சொல்லிவிட்டார். அடிமட்டத்திலிருந்து வந்த ரஜினி இன்று உலகமே தெரியும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறார் என்றால் பின்னாடி அவர் பட்ட கஷ்டம் போராட்டம் உழைப்பு எல்லாம் ரசிகர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும். அதை ஒரு விழாவாக பார்க்கும்போது இன்னும் அவர்களுக்கு உற்சாகத்தை தரும். இருந்தாலும் இந்த வருட இறுதி வரை காத்திருப்போம். எப்படியாவது ரஜினி இதற்கு சம்மதிப்பார் என கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள் சிலர் கூறி வருகிறார்கள்.

எத்தனை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீசியன்கள். இந்த 50வருடத்தில் அவர் கடந்து வந்த பாதை எல்லாவற்றையும் அவருடன் நெருக்கமாக இருந்த பல பேர் கூறும் போது இன்னும் ரஜினியை பற்றி தெரியாத பல விஷயங்கள் நமக்கு தெரியவரும். ஆனால் இதற்கு ரஜினி சம்மதிக்க வேண்டுமே.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Next Story