சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஒரு பேட்டி கொடுத்தாலோ அல்லது ஒரு விழாவில் பேசினாலோ அவர் பேசியது ஒரு வாரத்திற்கு பிரதிபலிக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் துக்ளக் 50வது ஆண்டு விழாவில் சமீபத்தில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசியது குறித்து தொடர்ச்சியாக பல அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்
ஏற்கனவே கொளத்தூர் மணி பெரியாரை விமர்சனம் செய்ததாக ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்ததோடு அவரது அமைப்பின் சார்பில் கோவை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன்னர் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் ரஜினியின் துக்ளக் பேச்சு குறித்து கூறிய போது கூறியதாவது: சமூகநீதி கோணத்தில் பெரியாரை பார்த்தால் அவரது போராட்டங்களை ரஜினி புரிந்துகொள்ள முடியும். பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி வருத்தம் தெரிவிக்க வேண்டும். சங்பரிவாரின் சதிக்கு ரஜினி பலியாகிவிடாமல் இருக்க வேண்டும்
இன்னும் பல அரசியல்வாதிகள் ரஜினியின் பேச்சு குறித்து விமர்சனம் செய்ய காத்திருக்கின்றனர் அதுமட்டுமன்றி கடந்த இரண்டு நாட்களாக அனைத்து தமிழ் தொலைக்காட்சிகளிலும் ரஜினியின் பேச்சு குறித்த விவாதம்தான் நடைபெற்றது என்பதும் இதனால் அந்த தொலைக்காட்சிகளுக்கு டிஆர்பி எகிறியது என்பதும் குறிப்பிடத்தக்கது
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…