தேவையில்லாததை பேசாமல் ரஜினி வாயை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தால் அவருக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் துக்ளக் விழாவில் பேசியது குறித்தும், நேற்று மன்னிப்பு கேட்க முடியாது என்று அளித்த பேட்டி குறித்தும், கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் தங்களுடைய கருத்தை தெரிவித்துள்ளனர். அதேபோல் தமிழக ஊடகங்கள் மட்டுமின்றி தேசிய ஊடகங்களிலும் நேற்று ரஜினி அளித்த பேட்டி தான் தலைப்பு செய்தி என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று காலை பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறியதாவது: நடைபெறாத ஒரு விஷயத்தை கூறி ரஜினி ஏன் மக்களை திசை திருப்ப வேண்டும் என தெரியவில்லை. அண்ணா, பெரியார், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய நான்கு தலைவருக்கு எந்த இழுக்கு ஏற்பட்டாலும் அதனை நாங்கள் கண்டித்து குரல் கொடுப்போம். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் என்பது தான் அதிமுகவின் கொள்கை. 1971ல் என்ன நடந்தது என்று தனக்கு தெரியாது என துக்ளக்கின் சோவே கூறியுள்ளார். தேவையில்லாததை பேசுவதற்கு பதிலாக ரஜினி வாயை மூடி மவுனமாக இருக்க வேண்டும். ரஜினியை கண்டு திமுக வேண்டுமானால் பயப்படலாம். ஆனால் அதிமுக பயப்படாது’ என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…