சூப்பர் ஸ்டார் ரஜினியை எதிர்த்து அரசியல் செய்தால் மட்டுமே தங்களுடைய பெயர் தலைப்புச்செய்திகளில் வரும் என்பதை அரசியல்வாதிகள் பலர் புரிந்து கொண்டனர். எனவேதான் ரஜினி என்ன சொன்னாலும் அதற்கு எதிராக விமர்சனம் செய்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகின்றனர்
இந்த நிலையில் ரஜினிகாந்த் சமீபத்தில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியது குறித்து விமர்சனம் செய்யாத தமிழக அரசியல்வாதிகளே கிட்டத்தட்ட இல்லை எனலாம்
இந்த நிலையில் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்களுக்கு எதிராக சென்னை மண்ணடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் பேசியபோது ’பாரதிராஜா இயக்கத்தில் நடித்த ரஜினி, இன்று பாஜக இயக்கத்தில் நடித்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதை தமிழக மக்கள் அனுமதிக்கமாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார்
ரஜினிக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் தற்போது அரசியல்வாதிகள் மாறி வருகின்றனர் என்பது இவரது பேச்சின் மூலம் தெரிய வருவதாகவும், விஜய்யை அரசியலுக்கு இழுத்து ரஜினிக்கு எதிராக மோத வைக்க முயற்சி செய்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
சின்னத்திரையில் தொகுப்பாளராக…
தமிழ் சினிமாவில்…
பொதுவாக பொங்கல்,…
இறுதிச்சுற்று சூரரைப்போற்று…
தமிழ் சினிமாவில்…