More

ரஜினிக்கு வழக்கு வாபஸ்…விஜய்க்கு சோதனை…வருமான வரித்துறை பாரபட்சம்?

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயிடம் இன்று மாலை திடீரென வருமானத்துறையினர் விசாரணை நடத்தினர். அதன்பின், அவரை அழைத்து அவரது வீட்டிற்கு சென்றனர். அதேபோல், பிகில்  தயாரிப்பாளர் அலுவலகம் மற்றும் வீடுகளின் சோதனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் ரஜினி  2002 முதல் 2005 ஆண்டுகளுக்கான வருமான வரியை செலுத்தவில்லை எனக்கூறி ரூ.66,22,436 அபராதம் விதித்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ரஜினி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அதன்பின் சில உடன்பாடுகள் ஏற்பட்டு ரஜினிக்கு எதிரான வழக்கை வருமான வரித்துறை வாபஸ் பெற்றது. இதில், ரஜினிக்கு ரூ.1 கோடி வரை அபாரதம் விதிக்க வாய்ப்பிருந்தும் அதை வருமான வரித்துறை அதிகாரிகள் செய்யவில்லை என அப்போதே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இன்று காலை குடியிரிமை திருத்த சட்ட மசோதா(CAA) மற்றும் தேசிய மக்கள் கணக்கெடுப்பு (NRC) ஆகியவற்றுக்கு ரஜினி ஆதரவு தெரிவித்து கருத்துகளை தெரிவித்தார். இன்று மாலையே விஜய் மற்றும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவன தரப்பிடம் வருமான வரித்துறையினர் சோதனையை துவங்கியுள்ளனர்.

Advertising
Advertising

பாஜக அரசுக்கு ஆதரவாக ரஜினி கருத்து தெரிவித்துவிட்டதால் அவரை விட்டு விட்ட வருமான வரித்துறை, விஜய் பக்கம் திரும்பியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Published by
adminram