More

மேன் Vs வைல்ட் படப்பிடிப்பில் ரஜினி – வைரலாகும் வீடியோ

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து மைசூருக்கு விமானம் மூலம் சென்றுள்ளார். மைசூர் அருகே உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் இந்த இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

Advertising
Advertising

ஏற்கனவே பிரதமர் மோடியை இயக்கிய பேர்கிரில்ஸ் இந்த ஆவணப்படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தில் இரண்டு நாட்கள் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் அதற்கு முன்னதாக அவருக்கு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது இன்றும் நாளையும் நடைபெறும் இந்த ஆவணப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் அதன் பின்னர் எடிட்டிங் மற்றும் பிற பணிகள் முடிந்து இன்னும் ஒரு சில நாட்களில் டிஸ்கவரி சேனலில் இந்த ஆவணப் படம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பந்திபுர் தேசிய பூங்காவில் அவர் படப்பிடிப்பு குழுவுடன் நடந்து செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts