இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்த நிலையில் அந்தப் படத்தை தொடர்ந்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இதுவரை ஷங்கர் இயக்கிய படங்களிலேயே மிகவும் மோசமான படம் இந்தியன் 2 தான் என கலாய்த்து வருகின்றனர்.
கமல்ஹாசனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஷங்கர் கதை முழுக்க சித்தார்த்துக்கும் அவரது அப்பா சமுத்திரகனிக்கும் நடக்கும் விஷயங்களை ஃபோகஸ் செய்தது தான் படம் அடிவாங்க காரணம் என்றும் பிரியா பவானி சங்கர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்தாலே அந்த படங்கள் அவுட் தான் என்பதற்கு இந்த படமும் விதிவிலக்கு இல்லை என்கின்றனர்.
ஷங்கரின் எந்திரன் படத்தை தொடர்ந்து 2.0 படத்தில் நடித்து ரஜினிகாந்த் பல்பு வாங்கிய நிலையில், தான் பி. வாசு சந்திரமுகி 2 படத்தில் நடிக்க அழைத்த போது முடியாது என உஷாராக மறுத்து விட்டாரா? ரஜினிகாந்த் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மேலும், லைகாவுக்கும் பார்ட் 2 படங்களுக்கும் சுத்தமாக ராசியில்லை என்றும் 2.0, பொன்னியின் செல்வன் 2, சந்திரமுகி 2, இந்தியன் 2 என வரிசையாக 2ம் பாக படங்கள் எல்லாம் படுதோல்வியை சந்தித்து வருகின்றன என இன்னொரு லாஜிக்கையும் கூறுகின்றனர்.
இதில், இந்தியன் 3 டிரைலரும் ஃபிளாப் டிரைலர் தான் என்றும் அதை பார்த்த ரசிகர்களுக்கு இந்தியன் 3 படத்தை பார்க்கும் ஆர்வமும் சேனாபதியின் அப்பா கதாபாத்திரத்தையும் அம்மாவாக காஜல் அகர்வால் செய்யப் போகும் காமெடிகளையும் பார்க்கப் போவதில்லை என ரசிகர்கள் இப்போதே முடிவு செய்து விட்டனர் என சோஷியல் மீடியாவில் ஷங்கரை ரவுண்டு கட்டி வருகின்றனர்.
உலக நாயகன் இதனால் தான் உஷாராக தனக்கு இந்தியன் 2 பிடிக்காது என்றும் இந்தியன் 3 தான் பிடிக்கும் என இப்பவே அடுத்த படத்துக்கு புரமோஷனுக்கு அடிபோட்டுள்ளார் என்கின்றனர்.
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…
Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…
தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…
Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…