அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க துவங்கி கடந்த 50 வருடங்களாக சினிமாவில் நடித்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்திய அளவில் இவரை சூப்பர் ஸ்டார் என அழைக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளிலும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. அதனால்தான் இவரின் படங்கள் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.
ரஜினிகாந்துக்கு இப்போது 74 வயது ஆகிறது ஆனாலும் சினிமாவில் தொடர்ந்து ஆக்டிவாக நடித்து வருகிறார். தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வருடம் மே மாதம் வெளியாகும் என கணிக்கப்படுகிறது. ஒருபக்கம் அடுத்த படத்திற்கும் ரஜினி தயாராகி விட்டார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 173 வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டு பின் சுந்தர்.சி அந்த படத்திலிருந்து வெளியேற தற்போது புதிய இயக்குனரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்த படத்தை இயக்குவார் என செய்திகள் வெளியானது..
இந்நிலையில்தான் இந்த டிசம்பர் மாதம் தனது ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்கப் போகிறார் ரஜினி. அவருக்கு வருகிற 12-ம் தேதி அவரின் பிறந்தநாள் வருகிறது. எனவே அன்று இரண்டு புதிய அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது. அவரின் 173 வது பட அறிவிப்பு அன்று வெளியாகிறது. அதேபோல் தற்போது நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் டீசர் அன்று வெளியாகும் என்கிறார்கள். சிலர் டீசர் இல்லை.. கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்கிறார்கள். எதுவாக இருந்தாலும் அது ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…