சிகிச்சைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா செல்லும் ரஜினி….

நடிகர் ரஜினி ஏற்கனவே 2 முறை மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதில் முதல் அறுவை சிகிச்சை சிங்கப்பூரிலும், 2வது அறுவை சிகிச்சை அமெரிக்காவிலும் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது உடல் நிலையை பரிசோதிக்க ரஜினி நாளை மறுநாள் இரவு தனி விமானத்தில் அமெரிக்கா செல்லவுள்ளார். இதற்கான சிறப்பு அனுமதியை அவர் மத்திய அரசிடம் பெற்றுள்ளார். அவருடன் அவரின் மனைவி மற்றும் மகள் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 மாதம் அமெரிக்காவில் தங்கியிருந்து ரஜினி தனது உடல்நிலையை பரிசோதித்து சென்னை திரும்புவார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Published by
adminram