ஒட்டுமொத்த தமிழக ஓட்டுக்களை இரண்டாக பிரித்த ரஜினிகாந்த்: பக்கா ராஜதந்திரமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்பது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள் உறுதி செய்துள்ளன

தமிழகத்தில் அதிமுக, திமுக மற்றும் ஜாதி கட்சிகள், சின்ன சின்ன கட்சிகள் என வாக்காளர்கள் பிரிந்து உள்ளனர். இந்த வாக்காளர்களில் ஒரு பிரிவை பிரித்து எடுப்பது என்பது சாமானிய காரியம் அல்ல

இதனால் பக்கா ப்ளான் செய்து ரஜினிகாந்த் தமிழகத்தின் ஒட்டுமொத்த வாக்காளர்களை இரண்டாக பிரிக்க முடிவு செய்துள்ளதாகவும், ஒன்று பெரியார் ஆதரவாளர்கள் இன்னொன்று இந்து ஆதரவாளர்கள் என்று பிரிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து மிகச்சரியாக பெரியார் மீது கை வைத்து உள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே தற்போது பெரியார் ஆதரவாளர்களான திமுக அதிமுக உள்பட மற்ற அனைத்து கட்சியினரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இன்னொரு பக்கம் இந்து ஆதரவாளர்கள் மற்றும் இந்து மதத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் ஒன்று சேர்ந்துள்ளனர். இதைத்தான் ரஜினி எதிர்பார்ப்பதாகவும் இந்து ஆதரவாளர்களின் ஒட்டு மொத்த வாக்குகள் தற்போது ரஜினிக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்றும் இதுதான் பக்கா ராஜதந்திரம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Published by
adminram