ரஜினிகாந்த் மட்டுமில்ல!.. மகேஷ் பாபு முதல் நயன்தாரான்னு ஆனந்த் அம்பானி கல்யாணத்துல பல பிரபலங்கள்!..

Published on: July 17, 2024
---Advertisement---

இந்த வருடம் மார்ச் மாதம் ஆரம்பித்த ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்சன்ட் திருமண விழா ஒருவழியாக ஜூலை 12-ஆம் தேதி ஆன நேற்று தாலி கட்டி திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்துக்கு முந்தைய விழாவிலேயே ரஜினிகாந்த், ஷாருக்கான், அமீர்கான், சல்மான்கான், ராம் சரண் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

நேற்று நடைபெற்ற திருமணத்திற்கு மீண்டும் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று நடனம் ஆடினார். அதன் காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. திருமணத்துக்கு முந்தைய விழா ரஜினிகாந்தை தவிர தமிழ் சினிமாவில் இயக்குனர் அட்லி மற்றும் தனது மனைவியுடன் பங்கேற்றார்.

இந்நிலையில், திருமண விழாவுக்கு நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் உடன் கலந்து கொண்டார். மேலும், சூர்யா மற்றும் ஜோதிகா திருமண விழாவில் பங்கேற்றனர். டோலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன மகேஷ் பாபு தனது மனைவி மற்றும் மகளுடன் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

ஹாலிவுட்டின் கவர்ச்சி நடிகையான கிம் கர்தாஷியன் மற்றும் ஹாலிவுட் நடிகர் ஜான் சீனா, நடிகை பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், ஆலியா பட், ஷாருக்கான், சுஹானா கான், அனன்யா பாண்டே என ஏகப்பட்ட பிரபலங்கள் பங்கேற்றனர்.

அட்லியின் மனைவி தனது முதுகில் மணமகனின் படை என எழுதிய வாசகத்தை திரும்பி நின்று காட்டிய போட்டோக்களும் வைரலாகி வருகின்றன. இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது செல்ல மகனான ஆனந்த் அம்பானி திருமணத்தை பல நூறு கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்தியுள்ளார்.

ஹாலிவுட் பாடகர்கள் எல்லாம் சமீபத்தில் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் பங்கேற்று பாட்டு பாடியிருந்தனர். ரிஹானாவை தொடர்ந்து ஜஸ்டின் பீபரின் கச்சேரி நடைபெற்றது. சினிமா பிரபலங்களை தாண்டி விளையாட்டு வீரர்களான தோனி உள்ளிட்டோரும், பல பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலர் பங்கேற்றனர்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment