இளம் வயது நண்பர்களுடன் சூப்பர் ஸ்டார்.. தலைவர் செம மாஸ்..!

by adminram |

7c2e447a435aa95a750340efb949c851

தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமா தாண்டி இந்திய அளவில் மிக பிரபலமான இவருக்கு பிறமொழி நடிகர்கள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். இவர் படம் ஓடுகிறதோ இல்லையோ ஆனால், இவருக்கு என்றுமே மவுசு குறைந்தது இல்லை.

தமிழ் சினிமாவில் முதன்முதலில் 50கோடி வசூல் செய்த படம் இவருடையதுதான். அதேபோல் முதல் நூறுகோடி வசூலுக்கும் இவரே சொந்தக்காரர். இவ்வாறு பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் ரஜினி. ஆரம்பகாலத்தில் கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார்.

aa53512e211468091344e92ee419fb0d
Rajinikanth

பின்னர் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் கே.பாலச்சந்தர் இவரை நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியமொழி படங்களிலும் ஆரம்பகாலத்தில் நடித்தார். இவ்வாறாக 90 படங்களுக்கும் மேல் நடித்த பின்னர் 1983ல் அமிதாப் பச்சன், ஹேம மாலினியுடன் இணைந்து Andhaa Kaanoon என்ற ஹிந்தி படத்தில் நடித்தார்.

இதன்பின் ஹிந்தியில் பல படங்களில் நடித்து அங்கும் முன்னணி நடிகராக வலம்வந்தார். இது தவிர ஆங்கிலம் மற்றும் பெங்காலி மொழிகளிலும் நடித்துள்ளார். இதுவரை இவர் சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் விருது 7 முறை தாதா சாகேப் பால்கி விருது 1முறை மற்றும் நந்தி விருது, மஹாராஷ்டிரா மாநில அரசின் விருது என மொத்தம் 41 விருதுகளை வென்றுள்ளார்.

09e088afad77c23dcb8cc721fca7789b-1
Rajinikanth

அரசியலுக்கு வருவேன் என க்கூறிவந்த இவர் இரண்டு ஆண்டுகளுக்குமுன் அதற்கான பணிகளில் இறங்கினார். இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம்காணவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நலன் கருதி அரசியலிலிருந்து விளகியுள்ளார்.

இந்நிலையில் ரஜினி சிறுவயதில் தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதை அவரது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ரஜினி தற்போது சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story