துப்பாக்கிச் சூடு சம்பவம் சர்ச்சைப் பேச்சு – நேரில் ஆஜராக ரஜினிகாந்துக்கு சம்மன்!

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு வந்த ரஜினிகாந்தை நேரில் வந்து விளக்கமளிக்குமாறு விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்களுக்கு எதிராக போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் சொல்லிய ரஜினி பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி 25 ஆம் தேதி விளக்கம் அளிக்க வேண்டுமென ரஜினிகாந்துக்கு ருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Published by
adminram