சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி தற்போது தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல நடிகரின் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் என்பவர் இயக்கவுள்ள படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்தில் நாயகனுக்கு இணையான வில்லன் கேரக்டர் என்பதால் அந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ’சயிர நரசிம்ம ரெட்ட’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தெலுங்கு படத்திலும் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படம் வெளிவந்தால் தமிழைப் போலவே அவருக்கு தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஏற்கனவே விஜய்சேதுபதி மலையாளத்தில் ஒரு சில படங்கள் நடித்துள்ளதால் தென்னிந்திய ஸ்டார் ஆக மாறிவிட்டார் என்று அவரது ரசிகர்கள் பெருமைப்பட்டு வருகின்றனர்
திரையுலகில் ஒரு…
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…