More

வழக்கை வாபஸ் வாங்குறீங்களா?.. அபராதம் விதிக்கட்டுமா?.. எச்சரித்த நீதிபதி…

நடிகர் ரஜினி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ஏப்ரல் – செப்டம் மாதம் வரை மாநகராட்சி சார்பில் விதிக்கப்பட்ட சொத்துவரி ரூ.6.5 லட்சத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் முதலே தனது மண்டபத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை என்பதால் சொத்துவரியை ரத்து செய்ய வேண்டும் என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து, திரைப்படங்களில் நடிக்க ரூ.100 கோடி சம்பளம் பெறும் ரஜினி ரூ.6.5 லட்சத்தை கட்ட முடியாமல் வழக்கு தொடர்ந்திருப்பது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற வழக்குகளை தொடர்ந்து நீதிமன்றத்தை நேரத்தை வீணடிக்க வேண்டாம் என நீதிபதி எச்சரித்தார். மேலும், வழக்கை வாபஸ் பெறவில்லை எனில் அபராதம் விதிப்பேன் என எச்சரித்தார். இதனால், ரஜினி தனது வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.

Published by
adminram

Recent Posts