ரஜினிகாந்த் சென்ற விமானம் திடீர் கோளாறு : பதட்டத்தில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியதிலிருந்து தினசரி தலைப்புச் செய்திகளில் இடம் பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவர் சென்னையிலிருந்து மைசூருக்கு விமானம் மூலம் சென்றபோது அவர் சென்ற விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரியவந்தது

இதனை அடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாகவும், அந்த விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த் உள்பட யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 

ரஜினிகாந்த் சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்திகள் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்ற தகவல் அனைவருக்கும் நிம்மதி அடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram