இதுவரை நடிக்காத வேடம்!.. ரஜினி படத்தில் நயன்தாராவுக்கு செம கேரக்டர்….

Published on: February 3, 2020
---Advertisement---

80cb56235114fb34378f0d995e5ab250

தர்பார் திரைப்படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இப்படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நிலையில், இன்ப அதிர்ச்சியாக இப்படத்தில் நயன்தாராவும் நடிப்பதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், இப்படத்தில் வழக்கறிஞராக நயன்தாரா நடிப்பதாக தற்போது செய்திகள் கசிந்துள்ளது. நயன்தாரா இதுவரை வழக்கறிஞர் வேடத்தில் எந்த படத்திலும் நடித்ததில்லை. ஆனால், இது உண்மையான தகவலா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Comment