இதுபோன்ற ஜென்மங்களை திருத்தவே முடியாது: ரஜினி உறவினர் குறித்து பாடகி சின்மயி!

பெண்களை சைட் அடிக்கவும், விடுமுறை வேண்டும் என்பதற்காகவும் தான் மாணவர்கள் போராட்டம் செய்வதாகவும், மாணவர்களுக்கு போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும், மாணவர்களை ஒரு சில அரசியல் கட்சிகள் தவறாக பயன்படுத்துவதாகவும், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் ஒய்ஜி மகேந்திரன் கருத்து தெரிவித்திருந்தார்.

ஒய்ஜி மகேந்திரனின் இந்த பேச்சுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மாணவர்களை தான் தவறாக பேசவில்லை என்றும் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் ஒய்ஜி மகேந்திரன் விளக்கமளித்தார்.

இந்த நிலையில் ஒய்ஜி மகேந்திரனின் இந்தப் பேச்சு குறித்து தனது டுவிட்டரில் கருத்து கூறிய பாடகி சின்மயி ’இதுபோன்ற ஜென்மங்களை திருத்தவே முடியாது என்றும், இவர்களை எல்லாம் கண்டும் காணாமல் அப்படியே விட்டு விட வேண்டும் என்றும், இவர்களை திருத்த நினைத்தால் நமக்கு தான் டைம் வேஸ்ட் என்றும் கூறியுள்ளார் 

பொதுவாக சின்மயி ஒரு டுவிட் போட்டால் அதற்கு ஆதரவான கருத்துகளை விட எதிர்ப்பான கருத்துக்கள் தான் அதிகம் பதிவாகும். ஆனால் அதிசயமாக பாடகி சின்மயின் இந்த கருத்துக்கு ஆதரவு அதிகம் பதிவாகி வருகின்றன. நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகலை என்பது குறிப்பிடத்தக்கது

Published by
adminram