ஏழரை சனியில் ரஜினி-முருகதாஸ்: ’தர்பார்’ பட வெற்றி குறித்து ஜோதிடரின் கணிப்பு!

Published on: January 7, 2020
---Advertisement---

ccc4f3ed595ebc5919565eb4a3fb9bca

ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தை பார்த்த ஒரு சிலர் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் கூறி வரும் நிலையில் தற்போது இந்த படம் குறித்து ஜோதிடர்களின் கணிப்பு குறித்த தகவல் வெளிவந்துள்ளது

ரஜினிகாந்துக்கு மகர ராசி திருவோணம் நட்சத்திரம் என்றும், ஏஏர் முருகதாசுக்கு மகர ராசி அவிட்ட நட்சத்திரம் என்றும் இரண்டு நட்சத்திரங்களும் தற்போது ஏழரைச்சனி காலத்தில் உள்ளது என்றும் ஜோதிட கூறியுள்ளனர். இருப்பினும் இந்த படம் வெளியாகும் 9 ஆம் தேதி அவிட்டம் மற்றும் திருவோணம் நட்சத்திரங்களுக்கு நல்ல காலமாக இருப்பதால், இந்த நட்சத்திர கூட்டணிக்கு அனைத்து அம்சங்களும் சாதகமாக உள்ளது என்றும் இதனால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்றும் கூறியுள்ளனர் 

மேலும் ஜனவரி 9ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு, சந்திரன் தனுசு ராசியில் சனி, கேது, குரு, புதன், சூரியன் கும்ப ராசியில் சுக்கிரன், விருச்சிகம் ராசியில் செவ்வாய் ஆகிய கிரகங்கள் சஞ்சரிப்பதால் இந்த கிரகங்களின் கூட்டணி ரஜினிக்கும் ஏஆர் முருகதாஸ்க்கும் மிகப்பெரிய அளவில் சாதகமாக இருப்பதாகவும் எனவே இந்த படத்திற்கு எந்த தடையும் வராது என்றும் படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர் 

அதே நேரத்தில் ஒரு திரைப்படத்தின் கதை நன்றாக இருந்து, திரைக்கதையில் பொருத்தமாக இருந்து, நடிப்பு அனைவரையும் அசத்தும் வகையில் இருந்தால் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் இதுபோன்ற ஜோதிடர்களின் கணிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Leave a Comment