ரசிகைக்கு வளைகாப்பு நடத்திய ரஜினி – வைரலாகும் புகைப்படம்

சென்னை திருவல்லிக்கேணியில் வசித்து வரும் விக்னேஷும் அவரின் மனைவி ஜெகதீஸ்வரியும் நடிகர் ரஜியின் தீவிர ரசிகர்கள் ஆவர். தற்போது ஜெகதீஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்த தம்பதி சமீபத்தில் தர்பார் படப்பிடிப்பு சென்னையில் நடந்த போது ரஜினியை சந்தித்தனர்.

அப்போது, தந்தை போல் இருக்கும் நீங்கள் எனக்கு வளைகாப்பு வளையல் அணிவிக்கும் படி  ரஜினியிடம் ஜெகதீஸ்வரி கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட ரஜினி வளையலை வரவழைத்து அவரின் கையில் அணிவித்தார்.  இது அங்கிருந்த ரசிர்கள் மற்றும் படக்குழுவினரை நெகிழ்ச்சி அடைய செய்தது. 

இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Published by
adminram