தேமுதிக வின் பொருளாளரும் நடிகர் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் ரஜினியின் அரசியல் கருத்துகள் விளக்கமளித்துள்ளார்.
தேமுதிக மொத்த அதிகாரமும் இப்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம்தான் இருக்கிறது. விஜயகாந்துக்கு பதிலாக கட்சி மேடைகளில் முழங்கிய அவர் இப்போது தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கவும் ஆரம்பித்துள்ளார்.
அப்படி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் ரஜினியின் அரசியல் வருகை குறித்தும் அவர் இப்போது பேசிவரும் கருத்துகள் குறித்தும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார். அதில் ‘ரஜினி சார் மீது நாங்கள் மிக மிக மரியாதை வைத்திருக்கிறோம். விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் அவர். ஆனால் இப்போது அவர் வெறும் நடிகர் மட்டுமே. அரசியல்வாதியாக ரஜினி எப்படி இருப்பார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. ரஜினி இப்போது யாரோ சொல்வதை சொல்கிறார்கள். அதில் கேள்வி கேட்டால் முழு விளக்கத்தையும் சொல்ல மறுக்கிறார். ஆனால் அதைப் பற்றி பலரும் பேசி குழப்பத்தைதான் உண்டாக்கிறார்கள். அதனால் தீர்வு கிடைக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…
அரை நூற்றாண்டுகளாகத்…
தமிழ் சினிமாவில்…
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…