சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் துக்ளக் ஆண்டு விழாவில் பேசியபோது பெரியார் குறித்து தெரிவித்த ஒரு கருத்தை ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சர்ச்சைக்குள்ளாகினர். பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவமரியாதையாக பேசியதாக குற்றம்சாட்டி ரஜினி மீது கடும் கண்டனங்களை தெரிவித்து திராவிடர் கழகத்தினர், அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையேல் அவரது வீட்டின் முன் போராட்டம் செய்வோம் என்றும் தெரிவித்தனர்
இந்த நிலையில் இன்று இதற்கு விளக்கமளித்த ரஜினிகாந்த் ’தான் உண்மையைத்தான் பேசியதாகவும், கேள்விப்பட்டதை தான் பேசியதாகவும் எனவே மன்னிப்பு கேட்க முடியாது என்றும் கூறினார். இதனை அடுத்து இன்று அவர் அளித்த பேட்டி இன்னும் ஒரு வாரத்திற்கு ஊடகங்களுக்கு தீனி ஆக இருக்கும் என்று கருதப்படுகிறது
இப்பவே கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ரஜினியின் இந்த பேட்டி குறித்து கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர். இன்று மாலை முதல் தொலைக்காட்சி ஊடகங்களிலும் இது குறித்த விவாதங்கள் இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எனவே இன்றைய ரஜினியின் ஐந்து நிமிட பேட்டி இன்னும் ஒரு வாரத்திற்கு ஊடகங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தீனியாக இருக்கும் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் ரஜினியின் ஆதரவாளர்களும் அவருக்கு எதிராக பேசுபவர்களும் அவருக்கு விளம்பரம் செய்தே வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…