நடிகர் ரஜினிகாந்த் தனது இளையமகள் சௌந்தர்யா ரஜினிகாந்துக்கு அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பான சில பொறுப்புகளை கொடுத்துள்ளார்.
பாட்ஷா படம் நடித்ததில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என கடந்த 25 ஆண்டுகாலமாக விவாதங்கள் நடந்து வருகின்றன. ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் இது சலிப்பை ஏற்படுத்த ரஜினிகாந்த் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என உறுதியாகக் கூறினார். ஆனாலும் அதன் பின்னரும் வரிசையாக படங்களில் நடித்து வருகிறாரே தவிர அரசியல் கட்சி தொடங்குவதற்கான எந்த பணிகளும் நடக்கவில்லை. இன்னும் தமிழகத்தில் தேர்தல் வருவதற்கு 7 மாதங்களே உள்ளன.
இது அவரது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கே அதிருப்தியை ஏற்படுத்த இப்போது ஒரு முடிவை எடுத்துள்ளார். மக்கள் மன்ற நிர்வாகிகளை எல்லாம் ஒருங்கிணைக்கும் பொறுப்புகளை எல்லாம் தன் இளையமகள் சௌந்தர்யாவிடம் ஒப்படைத்து உள்ளார். விரைவில் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவும் உள்ளாராம்.
Sorgavaasal: ஆர்.ஜே.பாலாஜியின்…
Vidamuyarchi: நேற்று…
பாலா இயக்கிய…
சினிமாவில் ஒரு…
லைகா நிறுவனத்தின்…