கடந்த பல வருடங்களாகவே ஆக்சன் படங்களில் நடித்து வந்த ரஜினி தற்போது சுந்தர்.சி-யுடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இயக்குனர் சுந்தர்.சி என்பதால் கண்டிப்பாக இப்படம் ஒரு ஜாலியான படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், கலகலப்பான குடும்ப படங்களில் ரஜினி நடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு கடந்த 5ம் தேதி வெளியானது.
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2026 பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. எனவே சுந்தர்.சி-யுடன் இணையும் திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026 மார்ச் மாதம் துவங்கும் என்கிறார்கள். அனேகமாக 2026 அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பை முடித்துவிட திட்டமிட்டுள்ளனர். ஏனெனில் இப்படம் 2027 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.
முதன்முறையாக தனது நண்பர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ரஜினி கால்ஷூட் கொடுத்திருக்கிறார். கமலை வைத்து அன்பே சிவம், ரஜினியை வைத்து அருணாச்சலம் ஆகிய படங்களை இயக்கிய சுந்தர்.சி 28 வருடங்கள் கழித்து இந்த படத்தில் படத்தில் இணைந்திருக்கிறார். இது ரஜினியின் 173வது திரைப்படமாகும்.
கடந்த 5ம் தேதி இந்த பட அறிவிப்பு தொடர்பான புகைப்படங்களை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்தது. தற்போது அது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் பின்னணியில் ஒரு பாடலும் ஒலிக்கிறது. எனவே அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ‘படத்திற்கு இசையமைப்பாளர் யார்?’ என தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். ஆனால், படக்குழு இன்னும் அதை அறிவிக்கவில்லை. சுந்தர்.சி என்பதால் ஹிப்ஹாப் தமிழாவாக இருக்கலாம் என பலரும் சொல்லி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…