சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சமீபத்தில் இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு ரஜினிகாந்த் வரவேண்டும் என்றும் அங்குள்ள தமிழர்களை அவர் சந்திக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்
இந்த வேண்டுகோளை ரஜினிகாந்தை ஏற்றுக் கொண்டதாகவும் விரைவில் அவர் இலங்கை செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த நிலையில் ரஜினிகாந்த் இலங்கை செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பம் செய்ததாகவும் இலங்கை அரசு விசா வழங்க மறுத்துவிட்டதாகவும் என்ற ஒரு வதந்தி பரவியது
இந்த வதந்திக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அரசு ரஜினிகாந்த் இதுவரை விசா கேட்டு விண்ணப்பிக்க வில்லை என்றும் அவ்வாறு விண்ணப்பித்தால் அவருக்கு நிச்சயம் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது
இந்த நிலையில் முன்னாள் இலங்கை அதிபரும் தற்போதைய இலங்கை பிரதமருமான மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினிஅகந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை. என்று கூறியுள்ளார்.
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…
நடிகர் தனுஷ்…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…