என்னது... ரஜினியே சாமியாராப் போகப்போறேன்னு சொன்னாரா? இது புதுசால்ல இருக்கு!

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 17:50:14  )
rajini
X

rajini

சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்னு ஒரு பாட்டு உண்டு. அந்தப் பாடலில் இருந்தே தமிழ்த்திரை உலகில் ரஜினிகாந்துக்கு எவ்வளவு மவுசு இருக்குன்னு தெரிந்து கொள்ளலாம். அவர் ஆரம்பத்தில் கமல் நடித்த படங்களில் வில்லனாகவே நடித்து வந்தார்.

ஒரு காலகட்டத்தில் அவருக்கு என்று உள்ள தனிப்பட்ட ஸ்டைல், டயலாக் எல்லாம் தனி ஒரு ரசனையைக் கொண்டு வந்து சேர்த்தது. அதுவே அவருக்குக் காலப்போக்கில் ஏராளமான ரசிகர்கள் வட்டாரத்தையும் கொண்டு வந்தது. ரஜினியின் நடிப்பில் தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி அதைத் தன்னோட தனித்துவமாகவே மாற்றிக்கொண்டார்.

தன் ஆருயிர் நண்பர் கமலின் அறிவுரைப்படி தனியாக நடிக்க ஆரம்பித்தார். வளர வளர அவருடைய படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன. வசூலை வாரிக்குவித்தன.

அதே வேளையில் சூப்பர்ஸ்டார் ஆன்மிகத்திலும் ஈடுபாடுடன் இருந்தார். ஒவ்வொரு படம் முடியும் போதும் இமயமலைக்குச் சென்று ஓய்வெடுப்பார்.

அந்த வகையில் ஒரு வித்தியாசமான கேள்வி யூடியூப் நிகழ்ச்சி ஒன்றில் ரஜினியைப் பற்றி அலசப்பட்டது. அது இதுதான். வாங்க பார்க்கலாம்.

'ஒரு காலகட்டத்துல சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறதை விட்டுவிட்டு சாமியாரா ஆக முடிவு பண்ணினார் என சொல்றாங்களே... அது எந்த வருஷம்? பாலசந்தர் சொல்லியும் கேட்காத ரஜினிகாந்த்தை கமல் தான் பேசி நடிக்க வைத்தார் என்று சொல்கிறார்களே அது உண்மையா?

அப்படி இருந்தா சிறந்த நட்பின் இலக்கணம் என அதை எடுத்துக்கலாமா' என நேயர் ஒருவர் இயக்குனரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் என்ன பதில் சொன்னார்னு பாருங்க...

ஒரு காலகட்டத்தில் இந்தத் திரையுலகை விட்டு விலக வேண்டும் என ரஜினிகாந்த் முடிவு எடுத்தது உண்மை தான். அப்போது அவரிடம் பேசி சரி செய்ததில் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு என்றார். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Next Story