80, 90களில் ரஜினிகாந்துக்கு இத்தனை படங்கள் வெள்ளி விழாவா? அங்கதான் நிக்கிறாரு சூப்பர்ஸ்டார்..!

ரஜினிகாந்த் நடிப்பில் நீண்ட நாள்கள் ஓடி சாதனை படைத்த படங்களின் லிஸ்ட்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 175 முதல் 200 நாள்களுக்கு மேல் ஓடிய படங்கள் இங்கு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 24 படங்களைப் பற்றிப் பார்ப்போம்.

ஏவிஎம் தயாரிப்பில் 1980ல் ரஜினி நடித்த முரட்டுக்காளை 250 நாள்களும், பில்லா 200 நாள்களும், 1982ல் மூன்று முகம் 300 நாள்களும், 1983ல் வெளியான தங்கமகன் 175 நாள்களும் ஓடி வசூலில் சாதனை படைத்தது.

1984ல் நல்லவனுக்கு நல்லவன் 200 நாள்களும், 1985ல் படிக்காதவன் 235 நாள்களும், 1987ல் மனிதன் 175 நாள்களும், 1989ல் ராஜாதி ராஜா 175 நாள்களும், ராஜா சின்ன ரோஜா 200 நாள்களும், மாப்பிள்ளை படம் 175 நாள்களும் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

1990ல் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் பணக்காரன். இது 185 நாள்களும், 1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி 235 நாள்களும், 1992ல் பி.வாசு இயக்கத்தில் பட்டையைக் கிளப்பிய மன்னன் 200 நாள்களையும், 1996ல் தர்மதுரை 195 நாள்களும் கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

1993ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கிய எஜமான் 185 நாள்களும், 1994ல் சுரேஷ்கிருஷ்ணாவின் இயக்கத்தில் வீரா 175 நாள்களும் கடந்து ஓடியது. 1995ல் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷா 400 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.

தொடர்ந்து முத்து 200 நாள்களும், 1997ல் சுந்தர்.சி. இயக்கத்தில் அருணாச்சலம் 200 நாள்கள் கடந்து ஓடியது. 1999ல் கே.எஸ்.ரவிகுமார் படையப்பா இயக்கத்தில் 175 நாள்கள் ஓடியது. 2005ல் சந்திரமுகி 800 நாள்கள் கடந்து ஓடி சாதனை படைத்தது. இதுதான் ரஜினியின் திரையுலக வரலாற்றிலேயே அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்த படம்.

2007ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் சிவாஜி. இது 275 நாள்கள் கடந்து ஓடியது. எந்திரன் படம் 235 நாள்கள் கடந்து ஓடியது. 2016ல் கபாலி பா.ரஞ்சித் இயக்கத்தில் சக்கை போடு போட்டது. இந்தப் படம் 275 நாள்கள் ஓடியது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it