இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிக்குப் பிறகு அடுத்த சூப்பர்ஸ்டார் யாருன்னு போட்டி நிலவுகிறது. அடுத்த சூப்பர்ஸ்டார் நாற்காலிக்கு இளம் நடிகர்கள் போட்டி போடும் வேளையில் விஜய், ரஜினி ரசிகர்கள் முட்டிக்கொண்டது நினைவு இருக்கலாம்.
காக்கா கதை எல்லாம் கடந்து போனது அப்படித்தான். ஆனா பல ஆண்டுகளுக்கு முன்பே ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் பட்டத்தைப் பற்றி இப்படி சொன்னது ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. வாங்க என்ன சொன்னார்னு பார்ப்போம்.
வேட்டையன் படத்தில் ஞானவேல் என்ன சொல்லி இருக்கிறார்? என்கவுண்டர் போலீஸ் ஆபீசராக ரஜினிகாந்த் நடித்துள்ளார். போலி என்கவுண்டர் பற்றித் தான் இந்தப் படத்துல சொல்லியிருக்காங்க.
அக்டோபர் 10 கங்குவா கூட மோதுமான்னு கேட்கும்போது கங்குவா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எங்களால ரஜினி படத்துக்கூட மோத முடியாதுன்னு சொல்லி விட்டார். வேட்டையன் வந்தா ரஜினி படம். அது ரணகளம் பண்ணிடும்.
நாங்க ஒதுங்கிடுவோம்னு அவர் சொல்லி விட்டார். அப்படின்னா அக்டோபர் 30ல் வருமா என்றாலும் அதை ரஜினி விரும்ப மாட்டார். ஏன்னா சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படம் அக்டோபர் 31ல் வருது. அது கமலின் சொந்தப் படம். எந்த நிலையிலும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு என்றைக்குமே அவர் தொந்தரவு கொடுக்க மாட்டார்.
சாமி படத்தின் வெற்றி விழாவுக்கு வரணும்னு பாலசந்தர் அழைக்கிறார். அதற்கு முன் வரை ரஜினி எந்த விழாவிலும் கலந்து கொள்ள வில்லை. முதன்முறையாக குருநாதருக்காக அந்த விழாவுக்கு வருகிறார். ரஜினி என்ன பேசப்போகிறார்னு எல்லாரும் எதிர்பார்க்கிறாங்க.
சூப்பர்ஸ்டார்ங்கறது ஒரு கலெக்டரோ, ஒரு கமிஷனரோ, ஒரு முதல்வரோ மாதிரியான விஷயம் கிடையாது. அந்தத் தேதியில் அந்த நிமிடத்தில் யார் லைம்லைட்டில இருக்காங்களோ அவர் தான் சூப்பர்ஸ்டார்னு அப்பவே ரஜினி உடைச்சி சொல்லிட்டாரு. அப்படிப் இருக்கும்போது இந்த சாமி படத்தைப் பார்த்தேன்.
விக்ரமோட ரேஞ்ச் எங்கயோ போகும். வேற லெவல்ல போய்க்கிட்டே இருப்பாரு. அப்புறம் விஜய். அவரை நேர்ல பார்த்துருக்கேன். பேசியிருக்கேன். நேர்ல பார்க்கறது வேற. ஸ்கிரீன்ல பார்க்குறது வேற.
மேற்கண்ட தகவலை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில்…
Vettaiyan: பொதுவாக…
இயக்குனர் சிறுத்தை…
மகிழ்திருமேனி இயக்கத்தில்…
சுந்தரி சீரியலில்…