Ramarajan: மக்கள் நாயகன், பசு நேசன் என்றெல்லாம் ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் நடிகர் ராமராஜன். தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்டவர் இவர். ரஜினி, கமல் கூட செய்யாத சாதனைகளை இவர் செய்திருக்கிறார். மதுரை மேலூரில் தியேட்டரில் வேலை செய்த குமரேசன் சென்னை வந்து இயக்குனர் ராமநாராயணன் அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக வேலை செய்தார். அதன்பின் அவரின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். ஒரு கட்டத்தில் அவரே சில படங்களை இயக்கினார் குமரேசன் என்கிற பெயரை ராமராஜனாக மாற்றி சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார்.
துவக்கத்திலிருந்தே கிராமத்து படங்களிலே பெரும்பாலும் நடித்தார். இளையராஜாவின் பாடல்கள், கவுண்டமணி செந்தில் காமெடி இவரின் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இவருக்கென பெரிய ரசிகர் கூட்டமும் உருவானது. எங்க ஊரு ராசா, நம்ம ஊரு ராசா, என்ன பெத்த ராசா என்கிற ஸ்டைலில் இவரின் படங்களின் டைட்டில் இருக்கும்.
90களில் ராமராஜன் படம் என்றாலே ஹிட்டுதான் என்கிற நிலை உருவானது. ராமராஜனின் கால்சீட் கிடைத்தால் போதும்.. காசை அள்ளிவிடலாம் என பல தயாரிப்பாளர்களும் இவரை தேடி போனார்கள்.
கங்கை அமரன் இயக்கத்தில் இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது. சில திரையரங்குகளில் இப்படம் ஒரு வருடம் கூட ஓடியது.
இந்திய சினிமாவில் மட்டுமல்லாது, உலக சினிமாவிலேயே ஒரு மாதத்தில் 43 திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஒரே நடிகர் ராமராஜன் மட்டும்தான். கரகாட்டக்காரன் வெற்றிக்கு பின் தமிழ் திரை உலகில் ராமராஜனை தேடி செல்லாத இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஆனால் ஒருகட்டத்தில் தொடர் தோல்வி படங்களை கொடுத்து ஃபீல் அவுட் ஆனார் ராமராஜன். சில வருடங்களுக்கு முன்பு சாமானியன் என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. ஆனாலும் தமிழ் சினிமாவில் ராமராஜன் செய்த சாதனைகளை எந்த நடிகரும் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…