சிவாஜி குடும்பத்தில் இன்னொரு கலை வாரிசு… இயக்குனராகும் பிரம்மாண்ட ஒளிப்பதிவாளர்!

நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமாரின் இளையமகன் தர்ஷன் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

மூன்று தலைமுறை நடிகர்களைக் கண்டது சிவாஜியின் குடும்பம். நடிகர் சிவாஜி கணேசனின் மகன்கள் ராம்குமார் மற்றும் பிரபு இருவரும் சினிமாவில் நடித்தார்கள். பிரபு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக ஜொலித்தார். அதன் பின்னர் அவர்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமானார். ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஆகியோர் நடிகர்களாக இருந்து வரும் நிலையில் இப்போது ராம்குமாரின் இளையமகன் தர்ஷன் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தின் இயக்குனராக தசாவதாரம் மற்றும் காற்று வெளியிடை போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவிவர்மன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் ஏற்கனவே மாஸ்கோவின் காவிரி என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram