ரம்யா பாண்டியன் பிக்பாஸில் பங்கேற்பதை உறுதி செய்த ப்ரோமோ வீடியோ!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழகம் முழுக்க பெரும் பேமஸான நிகழ்ச்சி. நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன் முடிந்துள்ள நிலையில் தற்ப்போது 4வது சீசன் துவங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியும் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது உறுதியாகிவிட்டது. கொரோனா ஊரடங்கினாள் ஷூட்டிங் தள்ளி சென்றுள்ளது. பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் மாதம் ஆரம்பமாக உள்ளதாம். இதன் முதல் கட்ட வேலையாக போட்டியாளர்கள் தேர்வு குறித்த பணிகள் நடைபெறு வருகிறது. இதில் இப்போதைக்கு நடிகை ரம்யா பாண்டியன் மற்றும் ஷிவானி நாராயணன் இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை நம்பும் வகையில் தகவல் வெளியாகியது.
இந்நிலையில் தற்ப்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றிருந்த ரம்யா பாண்டியன் சமீபத்தில் வெளியான அந்நிகழ்ச்சியில் புரோமோ வீடியோவில் இல்லை. இதன் மூலம் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது.