கவர்ச்சியில் 'தாராளமயம்' ரம்யா பாண்டியனின் பக்கா பிளான்!

by adminram |

3657371e39524fbad43d15b229474dc3

கடந்த 2015 ஆம் ஆண்டு 'டம்மி டப்பாசு' என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் நடிகை ராமயா பாண்டியன். இப்படி ஒரு படம் வந்ததா என்பதே பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு இந்தப்படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை.

இதையடுத்து ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான 'ஜோக்கர்' என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக அனைவரிடமும் பாராட்டை பெற்றார். இந்தப்படம் பிலிம் ஃபேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை வென்றது. வெளிநாடுகளிலும் பல விருதுகளை வாங்கி குவித்தது.

இதையடுத்து 'ஆண் தேவதை' என்ற படத்தில் நடித்தார். இதில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்தப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதன்பின் விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4ல் கலந்துகொண்டார்.

b8068c1162159359c1efe69c7fa4ded1-1

சினிமாவின் மூலம் பிரபலமடையாத இவர் பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி ஆகிய நிகழிச்சிகளில் கலந்துகொண்டு ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இதெற்கெல்லாம் முன்னதாக தனது இடுப்பை காட்டி இவர் வெளியிட்ட அந்த ஒரு படம் இவரை பெரிய பிரபலமாக்கியது.

இதன்பின் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி படங்களை அதிகமாக வெளியிட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது சூர்யா தயாரிக்கும் 'ராமே ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்' படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து மேலும் இரண்டு படங்களிலும் நாயகியாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம். இதனால், முந்தைய படங்களில் நடித்ததைப்போல் இழுத்து மூடிக்கொண்டு நடித்தால் வேலைக்கு ஆகாது என்பதை புரிந்துகொண்டு, அளவற்ற கவர்ச்சியில் நடிப்பதற்கும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். (பிழைக்க தெரிந்த புள்ள..)

Next Story