
வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் பா.ரஞ்சித். அட்டகத்தி திரைப்படம் மூலம் இயக்குனரானார். அந்த திரைப்படத்தில் சென்னைக்கு அருகே வசிக்கும் இளைஞர்கள் காதலை எப்படி கையாளுகிறார்கள் என காட்டியிருந்தார். அப்படத்திற்கு பின் மெட்ராஸ், கபாலி, காலா என சீரியஸ் படங்களை அவர் இயக்கினார். அதேநேரம், இந்த 3 திரைப்படங்களிலும் அழகிய மெல்லிய காதல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

தற்போது அவர் ஆர்யாவை வைத்து ‘சர்பட்டா பரம்பரை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் 50 வருடங்களுக்கு முன்பு வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை பற்றிய திரைப்படமாகும். இப்படம் வருகிற 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அடுத்து ஒரு காதல் திரைப்படத்தை இயக்க பா.ரஞ்சித் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாக இருக்கும் என செய்திகள் கசிந்துள்ளது. அனேகமாக இப்படத்தில் ‘ஓ மை கடவுளே’ புகழ் அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.





