என் கிரஷ் அவர்தான்.. அவர் கூட டேட்டிங் போகணும்… ஓப்பனா சொன்ன ராஷ்மிகா…

Published on: May 30, 2021
---Advertisement---

61d22f8d4d0279f9947fd8acedfcd833-1

‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படம் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவருடன் ‘கீதாகோவிந்தம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனார். அப்படத்திற்கு பின் மகேஷ்பாபு உள்ளிட்ட சில நடிகர்களுடன் அவர் நடித்துவிட்டார்.

தமிழில் கார்த்தி நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழிலும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். எனவே, அவர் தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என அவர்கள் சமூகவலைத்தளங்களில் கோரிக்கை வைத்து வருகிறனர்.

bab3c8325f853ec87a3be28cf63b4d29

ஏனெனில், ராஷ்மிகா மந்தனா காட்டும் ரியாக்‌ஷனுக்கு ரசிகர்கள் அடிமையாகி போயுள்ளனர். ஒருபக்கம் விஜயின் 67வது படத்தில் நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் தனக்கு பாகுபலி புகழ் பிரபாஸ் மீது கிரஷ் உள்ளது எனவும், அவருடன் டேட்டிங் போக விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பிரபாஷுடன் நடிக்கும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்து தெலுங்கு நடிகர்களை கடுப்பேற்றியுள்ளார்.

6c55363f88c5ce3d209d623e7ee727bd-1

இத்தனைக்கும் தற்போது பிரபாஸ் ஒரு ஹிந்தி படத்திலும், ராஷ்மிகா மந்தனா ‘மிஷன் மஞ்சு’ ஹிந்தி படத்திலும் நடித்து வருகிறார்கள். ஆனால், இருவரும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு இன்னும் அமையவில்லை. ராஷ்மிகா அடுத்து அமிதாப்பச்சன் மற்றும் அல்லு அர்ஜுனுடன் அவர் நடித்த ‘புஷ்பா’ திரைப்படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment