Categories: latest news

அடுத்த திருமணத்துக்கு தயாராகிட்டாரா ரவி மோகன்?.. மாப்பிள்ளை கணக்கா கோட் சூட்ல இருக்காரே!..

நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் எல்லாம் யாருக்கோ மறைமுகமாக சேதி சொல்லும் விதமாகவே இருந்தது. புதிய கதவு திறந்து விட்டது என்றும், இன்கமிங் நியூஸ் என்றும் பதிவிட்டு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற வேல்ஸ் நிறுவனர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் தனது காதலி கெனிஷா உடன் அவர் வந்ததே பெரிய பிரளயத்தை கிளப்பியது.

ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையே நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. விரைவில் ரவி மோகன் பாடகி கெனிஷாவை திருமணம் செய்துக் கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மாப்பிள்ளை கணக்கா அவர் கோட் சூட் அணிந்துக் கொண்டு நாற்காலியில் ராஜா போல கெத்தாக அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ஸ்கோர் செய்துள்ளார்.

ரவி மோகன் கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தான் வெற்றியை ருசித்து இருந்தார். மணிரத்னம் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ரவி மோகன் சோலோவாக நடித்த அகிலன், இறைவன், சைரன், பிரதர் மற்றும் இந்த ஆண்டு கிருத்திகா உதயநிதி நடிப்பில் வெளியான காதலிக்க நேரமில்லை என அனைத்து படங்களும் அட்டு ஃபிளாப் ஆகிவிட்டன.

அடுத்ததாக கராத்தே பாபு படத்தை ரொம்பவே நம்பிக் கொண்டு நடித்து வருகிறார். அந்த படத்திற்கும் ஃபைனான்சியர் ரத்தீஷ் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரொம்ப காலமாக ஜீனி படமும் உருவாகி வருகிறது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீலீலா, அதர்வா முரளி நடித்து வரும் பராசக்தி படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் ரவி மோகன். அடுத்த பொங்கலுக்கு அந்த படம் வெளியாகிறது.

Published by
Saranya M