25 வயசு ஹீரோயினை 56 வயசு ஹீரோ இன்னாமா நசுக்கி பிழியுறாரு!.. இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்?..

Published on: July 17, 2024
---Advertisement---

டோலிவுட் நடிகர் ரவி தேஜா நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள மிஸ்டர் பச்சன் படத்திலிருந்து வெளியான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக கிண்டல் செய்யப்பட்டு வருகின்றன. இந்திய சினிமாவில் 70 வயது நடிகரும் 20 வயது நடிகையுடன் குத்தாட்டம் போடுவது சகஜமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

56 வயதாகும் ரவி தேஜா 25 வயது ஆகும் நடிகை பாக்யஸ்ரீ போஸை ஹீரோயின் ஆக நடிக்க வைத்ததிலிருந்தே ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் ஆக வெளியான பாடல் காட்சிகளில் இடம்பெற்ற சீன்களை நெட்டிசன்கள் பயங்கரமாக வைரலாக்கி கலாய்த்து வருகின்றனர்.

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி தேஜா பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். அடுத்ததாக ஹரிஷ் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் மிஸ்டர் பச்சன் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் ரவி தேஜாவுக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடித்து வருகிறார்.

இளம் நடிகையான பாக்யஸ்ரீ போஸ் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளநிலையில் ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது அழகைக் கண்டு மயங்கி வருகின்றனர்.

அந்த பொறாமையின் காரணமாகவே 56 வயது நடிகர் எப்படி 25 வயது நடிகையுடன் இப்படி படு நெருக்கமாக நடிக்கலாம் என்கிற கேள்விகளை எழுப்பி வருவதாக ரவி தேஜாவின் ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

விரைவில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியாக காத்திருப்பதாகவும் கூடிய சீக்கிரமே இந்த படம் வெளியாகப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அஜய் தேவகன் இந்தியில் நடித்த ரைடு படத்தின் தெலுங்கு ரீமேக் தான் இந்த படம்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.