வனிதா விஜயகுமார் வெளியேற காரணம் அந்த நடிகையா?.. பரபரப்பு தகவல்

by adminram |

6813328d55172453d62827b554eaa38e

சர்ச்சை, பரபரப்புகளுக்கு பெயர் போனவர் வனிதா விஜயகுமார். ஒன்று சர்ச்சையான இடத்தில் இவர் இருப்பார். இல்லை சர்ச்சை இவரை தேடி வரும். பீட்டர்பால் என்பவரை அவர் திருமணம் செய்தது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி பலருடனும் சண்டை போட்டார். லட்சுமி ராமகிருஷ்ணை வாடி போடி என கடுமையாக திட்டினார். நடிகை கஸ்தூரியிடம் வாக்குவாதம் செய்தார். என் சொந்த வாழ்வில் கருத்து தெரிவிக்க இவர்கள் யார் என்பதே வனிதாவின் கருத்தாக இருந்தது.

1fac44cf760b224cc2341909d9561019

அதன்பின் பீட்டர் பாலை பிரிவதாக அறிவித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சிக்கு பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளில் அவர் தொடர்ச்சியாக கலந்து கொண்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அதன்பின் இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

d817a15df3cf0268f1ea1e475829dbf8

இந்நிலையில், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக நேற்று திடீரென அவர் அறிவித்தார்.. ஒரு சீனியர் பெண்மனி தன்னை அவமானப்படுத்துவதாக அவர் கூறியிருந்தார். 3 குழந்தைகளுக்கான தாயான ஒரு பெண்ணை இந்த சமூகம் இப்படித்தான் நடத்துகிறது. கணவர், குடும்பம் என அந்த ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றி பெறுவது சில பெண்களுக்கு பிடிக்கவில்லை. என்னால் சுரேஷ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற வேண்டியிருந்தது. அதற்காக வருந்துகிறேன் என கூறியிருந்தார்.

d089661c4d01f80b5f930f952bd2c967

தற்போது வனிதா விஜயகுமார் கூறும் அந்த பெண்மணி யார் என்பது தெரியவந்துள்ளது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்சிக்கு நடுவராக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணனைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார் என பலரும் கூறி வருகின்றனர்.

7b848fd02905b537d8051dabc4e98c41

அதாவது, வனிதாவின் நடிப்புக்கு மிகவும் குறைவான மதிப்பெண்ணை ரம்யா கிருஷ்ணன் கொடுத்தார் எனவும், 10க்கு வெறும் ஒரு மதிப்பெண்ணை மட்டுமே கொடுத்ததால் கடுப்பான வனிதா இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Next Story